சிம்பு குரலில் மாநாடு சிங்கிள் பாடல் கசிந்தது – இதோ!

Simbu-STR-Maanadu

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்திற்கு மிக ஆவலாக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு அதற்கு இடையில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ’உனக்கு நான் வேணா டி’ என்ற பெயரில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் என கூறப்பட்டு பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவின் குரலில் உருவாகியுள்ள அப்பாடல் உண்மையில் மாநாடு படத்தின் பாடல் தான் என்பது போல சிம்புவின் தீவிர ரசிகரும் நடிகருமான மஹத்தும் லைக் செய்துள்ளார்.

Loading...