LKG வசூல் பணத்தை படக்குழு இதற்காக செலவு செய்கிறார்களா?- பாராட்டும் மக்கள்

பிரபு இயக்க ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடித்திருந்த படம் LKG. ஆர்.ஜே.பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனத்தில் இப்படம் உருவானது.

முழுக்க முழுக்க அரசியல் காமெடி படமான இதில் அணைத்து அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுவிட்டது, வசூலிலும் கலக்கி வருகிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று இப்படத்தின் வெற்றிவிழா நடந்தது.

இப்போது ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படத்தை வெற்றியாக்கிய மக்களுக்கு நன்றி, இப்படத்தில் வரும் வசூலை வைத்து 10 அரசு பள்ளிகளை தத்தெடுக்க இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...