“அஞ்சான் 2” என்று ரசிகர்கள் சத்தம்.. – லிங்குசாமி கூறிய செம பதில்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த “அஞ்சான்” படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வரவே லிங்கசாமிக்கு பல வருடங்கள் தேவைப்பட்டது.

பல வருடங்கள் கழித்து தான் சண்டக்கோழி 2 படத்தை லிங்குசாமி இயக்கினார். முதல் பாகம் போல இந்த படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் நல்லபடியாக ஓடியது.

இந்நிலையில் இன்று நடந்த ஒரு விருது விழாவில் லிங்குசாமி மேடையில் இருக்கும்போது சூர்யா ரசிகர்கள் “அஞ்சான் 2” என கத்தினர்.

பதில் அளித்த இயக்குனர் சூர்யா தான் எப்போதும் மதிக்கும் ஒரு நடிகர் என்றும், அவருடன் மீண்டும் ஒரு படம் நிச்சயம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...