பாகிஸ்தான் ராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட அபிநந்தன் தற்போதைய நிலை – புதிய விடியோவால் நிம்மதி!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லை பகுதிகளில் கடும்பதற்றமாக காணப்படுகிறது.

இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதில் காயத்துடன் ஒரு கமாண்டோ பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார். அங்கே பாகிஸ்தான் ராணுவம் அவரை கைதுசெய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக விடியோவுடன் கூடிய தகவல்வந்தது.

முதலில் பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் அபிநந்தன் என்ற அந்த கமாண்டோவை தாக்கப்பட்டு முகம் முழுவதும் ரத்த காயத்துடன் காணப்பட்டார்.

தற்போது வேறொரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் பாகிஸ்தான் ராணுவம் அவருக்கு முதலுதவி செய்து மரியாதையுடன் நடத்தப்படுகிறார்.

மேலும் அந்த வீடியோவில் பேசும் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் மிகவும் மரியாதையுடன் நடந்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட இவருக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்த இந்தியர்களான நமக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

Loading...