தமிழ் படங்களுக்கு ஆப்பு வைத்த கேரளா – இனிமே இப்படித்தான் ரிலீஸ் ஆகும்!

தற்போது தமிழ் படங்களுக்கு இந்திய முழுவதும் வரவேற்பு கிடைக்கிறது. அதுவும் கமல் ஹாசன், ஷங்கர் படமென்றால் உலக அளவில் வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், மற்ற மாநிலங்களில் தமிழ் படங்கள் வெளியாகும் போது அம்மாநில படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். உதாரணமாக, ரஜினியின் பேட்ட படம் வெளியான போது ஆந்திராவில் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படமும் வெளியானது. இதனால், வசூல் பாதிக்கப்படாமல் இருக்க ரஜினியின் பேட்ட படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது.

இதனை பின்பற்றி கேரளாவும் புதிய கட்டுபாடு விதிக்கவுள்ளது. கேரளாவில் வெளியாகும் தமிழ் படங்களால் மலையாள படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதன் காரணமாக, மலையாள படங்களின் வசூல் பாதிக்காமல் இருக்க தமிழ் படங்களுக்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Suggestions For You

Loading...