கவர்ச்சி பாடலுக்கு பின்னால் நடக்கும் கூத்து! பிரபல நடிகை ஆவேசம்!

சினிமா படங்களில் பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுண்டு. அதிலும் கமர்சியல் படங்களில் ஐட்டம் பாடல் ஒன்று நிச்சயம் இருக்கும். இதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் சில நாட்கள் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த கலாச்சாரம் தற்போது குறைந்துவிட்டது. ஹிந்தி சினிமாவில் இந்த கலாச்சாரம் தொடர்ந்து பல படங்களில் இருந்து வருகிறது.

இதற்கென கவர்ச்சி நடிகைகளை குத்தாட்டம் போட வைக்கிறது. இந்த பாடல்களுக்கென அவர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். அதே வேளையில் நடிகைகளை ஆபாச கோணத்தில் காட்டுவதும் நடைபெறக்கூடிய விசயம் தான்.

இந்நிலையில் நடிகை கத்ரீனா கைஃப், ஐட்டம் பாடல்களில் நடிகைகள் போகப்பொருளாக காட்டுவதாக இருந்தால் அந்த மாதிரி பாடல்களில் நடிகைகள் நடனமாடக்கூடாது என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...