விஜய்யின் பெருந்தன்மை – பாலிவுட் நடிகை கத்ரினா கைப் வெளியிட்ட சுவாரசிய சம்பவம் !

vijay katrina kaif

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரினா கைப். சமீபத்திய டிவி ஷோ ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் பற்றி பாராட்டிப் பேசியிருக்கிறார்.

விஜய், கத்ரினா கைப் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரப் படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ளனர். அதில் நடிக்கும் போது கத்ரினா வளர்ந்து வரும் ஒரு நடிகைதான்.

“ஊட்டியில் அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து கொண்டு என்னுடைய போனில் பிசியாக இருந்தேன். அப்போது எனக்கு முன்பாக யாரோ வந்து நிற்பது தெரிந்தது. போனில் பிசியாக இருந்ததால் அது யாரோ நிற்கிறார்கள் என்று நிமிர்ந்து பார்க்காமல் இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கவனித்தால் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.

யார் அது என நிமிர்ந்து பார்த்தேன். அவர் என்னுடன் விளம்பரப் படத்தில் உடன் நடிப்பவர், அவர்தான் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார், அவர் பெயர் விஜய். நான் போனில் பிசியாக இருந்ததால் அதைப் பார்த்து முடிக்கும் வரை அவர் பொறுமையாகக் காத்திருந்தார். என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று பெருந்தன்மையாக நின்றிருக்கிறார். நான் நிமிர்ந்து பார்த்ததும், குட்-பை எனச் சொல்வதற்காக்க் காத்திருந்திருக்கிறார்,” என்று அந்த சுவாரசியமானத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார் கத்ரினா கைப்.

Suggestions For You

Loading...