தனுஷின் அசுரன் படத்தின் நடிக்கும் பிரபல நடிகரின் மகன்!

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் கடைசியாக வெளியான “வட சென்னை” படம் செம ஹிட் அடித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

அதற்கு முன்பு இதே கூட்டணி “அசுரன்” என்ற படத்திற்காக இணைந்துள்ளார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் வந்த போஸ்டர் கூட மிரட்டலாக இருந்தது. இப்படத்தின் தற்போது நடிகர் கருணாஸின் மகன் கென் இணைந்துள்ளாராம். இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...