கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் ரெடி – கவுண்டமணி, செந்திலுக்கு இப்படியொரு கதாப்பாத்திரமா?

கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் மெகா ஹிட் ஆனது. இந்த படம் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நின்று வருகின்றது.

ஏன், இப்போது டிவியில் போட்டாலும் இன்றைய தலைமுறையினரும் விரும்பி பார்க்கும்படி இருக்கும், இதில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இளையராஜாவிற்கு அடுத்து கவுண்டமணி, செந்தில் தான்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் முடிவு செய்ய, முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கவுள்ளார்களாம்.

மேலும், கவுண்டமணி பாட்டு வாத்தியார் ஆகிவிடுவாராம், செந்தில் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆவப்போவது போல் அந்த கதையை வடிவமைத்துள்ளார்களாம்.

Suggestions For You

Loading...