காஞ்சனா 4 பட்ஜெட் இத்தனை கோடியா? லாரன்ஸ் பிரம்மாண்ட பிளான்!

லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 சமீபத்தில் திரைக்கு வந்தது. பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

போட்டிக்கு எந்த படமும் இல்லாத இந்த நேரத்தில் காஞ்சனா 3 பல இடங்களில் நன்றாக ஓடிவருகிறது. இதனை தொடர்ந்து காஞ்சனா அடுத்த பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சனா 4 எடுப்பதற்கான வேலைகளில் தற்போது லாரன்ஸ் முடிவெடுக்க, அதையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம்.

அப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் 3டி-யில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Loading...