நாக்கை புடுங்கற மாதிரி ஆளும் கட்சியை கேள்வி கேட்ட கமல் ஹாசன்!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாளுக்கு நாள் பெரியதாகி வருகிறது. பல்வேறு திருப்பங்களை தினமும் சந்தித்து வரும் நிலையில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு இதை ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டு என்று ஒரே குரலாக நாடு முழுவதும் ஒளித்துவருகிறது.

இந்நிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான எனது கேள்விகள்? என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் சரமாரியாக ஆளும் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்,

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாலியல் கொடூர வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி ஆகியவற்றை போலீசார் வெளியிட்டது ஏன்?

அம்மா வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?, வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது?. பெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுகிறதே, உங்களுக்கு பதறவில்லையா?

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே ஏன்?

என்று கமல் ஹாசன் எழுப்பிய கேள்விகளுக்கு நிறைய ஆதரவு கிடைத்துள்ளது.

Suggestions For You

Loading...