இந்தியன் 2 படத்திற்கு இந்த பாலிவுட் நடிகர் தான் வில்லனா?

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்கிவருகிறார் . கமல் ஹாசன் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. அதனால் ஒரு பிரபல ஹிந்தி நடிகரை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர்.

அஜய் தேவ்கனிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிறகு கால் சீட் சிக்கலாம் நடிக்க முடியாமல் போனது. அவரை தொடர்ந்து 2.0வில் நடித்த அக்சய் குமாரிடம் பேசினார். ஆனால் அவர் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்றாலும் கைவசம் பல ஹிந்தி படங்கள் இருப்பதாக சொல்ல தனது இயலாமையை தெரிவித்து வருகிறார்.

அதனால் தற்போது அமிதாப்பச்சனின் மகன் அமிஷேக்பச்சனிடம் ஷங்கர் பேசி வருகிறார். இதற்கு முன்பு தமிழ் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய குரு, ராவணன் படங்களின் ஹிந்தி பதிப்பில் அபிஷேக்பச்சன் நடித்துள்ளார்.

ஆனால் நேரடி தமிழ்ப்படத்தில் இதுவரை அவர் நடிக்கவில்லை. தற்போது இந்தியன்-2 படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமானால், அபிஷேக்பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படமாக இது இருக்கும்.

Suggestions For You

Loading...