மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் – பிக் பாஸ் 3 ப்ரோமோ ரெடி!

kamal-haasan

கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது நடிகர் கமல்ஹாசன். முற்றிலும் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் பேசும் புறணியைக் கேட்கத் தொடங்கியதில், ஷோ செம ஹிட்.

கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த முதல் சீஸனில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஓவியா, சினேகன் உள்ளிட்டோர் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.

2018-ம் ஆண்டில் இரண்டாவது சீஸனுக்கு ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மஹத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கிளாமர் லுக்கும் கணவன் மனைவியான `தாடி’ பாலாஜி – நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 துவங்க உள்ளது. இதையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். இன்று அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் புரமொஷன் வீடியோக்களை படப்பிடிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சிக் குழுவினர். இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என தெரிய வருகிறது.

மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் - பிக் பாஸ் 3 ப்ரோமோ ரெடி!

பிக் பாஸ் ஷோ மிக பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணம் கமல் ஹாசன் தான். அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை வார இறுதி எபிசோடுகளில் பார்க்க முடிந்தது. இந்த முறையில் அதை எதிர்பார்க்கலாம் எனபது உறுதி!

Loading...