துளி மேக் அப் இல்லாத காஜல் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ் – இதான் ஒரிஜினல் முகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். சூர்யா, அஜித், விஜய், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர் அவர். ஆனால் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.

நடிகை காஜல் அகர்வாலை நாம் எப்போதும் முழு மேக்கப் உடன் தான் பாத்திருப்போம். அவர் தற்போது முதல் முறையாக சுத்தமாக துளி மேக்கப் கூட இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மக்கள் பெரும்பாலும் வெளித்தோற்றத்தை பார்த்துத்தான் விரும்புகிறார்கள் என்பதால் நம் உண்மையான முகத்தையே மறந்துவிடுகிறோம். அழகு சாதனபொருட்களுக்காக பல நூறு கோடிகள் செலவழிக்கப்படுகின்றன. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கும் என காஜல் பேசியுள்ளார்.

காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படத்திற்கு 2 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.

kajal agarwal
kajal agarwal
kajal agarwal
kajal agarwal

Suggestions For You

Loading...