சூர்யாவின் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதி இது தானா? – அப்போ செம ட்ரீட் தான்!

"மாற்றான்" படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் "காப்பான்”.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் கதைக்களமும் இந்தியாவிற்கு வரும் ஆபத்தை காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளதால் அந்த தேதி சரியாக இருக்கும் என படக்குழு எண்ணுகிறது.

Loading...