அஜித்துடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் – தமிழில் முதல் படம்!

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமாக உருவாகவுள்ளது.

Jhanvi Kapoor

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்கிறார். நடிகை டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்தின் 59வது படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அஜித் படத்தில் நடித்தால் ஜான்விக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து தன் மகளை நடிக்கவைக்கவுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

Suggestions For You

Loading...