இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

நடிகர் ஹரிஷ் கல்யாண் இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறி இருக்கிறார். ஆனாலும் அவர் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதை விரும்பாமல், ஒவ்வொரு படத்திலும் ஒரு சவாலான கதாப்பாத்தித்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம்”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” ஷில்பா மஞ்சுநாத் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் நாளை வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மீடியா நபர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது, இப்பொது இதன் விமர்சனத்தை பார்ப்போம்…

கதை:

கவுதம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ் கல்யாண் அடிக்கடி கோபப்படும் இளைஞனாக நடித்துள்ளார். தனது தாய் அவரை விட்டு பிரிந்தபிறகு இப்படியொரு மனநிலைக்கு தள்ளப்படுகிறார்.

அப்போது ஒரு சண்டையில் ஹீரோயின் ஷில்பாவின் பழக்கம் கிடைக்க அவர்களுக்குள் காதல் வருகிறது, மிகவும் மென்மையாக காதலி அவளுக்கு கோபக்கார காதல், இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வர பிரிகிறார்கள், காதலியை கொலை செய்யும் அளவிற்கு காதலன் ஹரிஷ் மனநிலைக்கு செல்கிறார், பிறகு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை.

விமர்சனம்:

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பார்த்த பிறகு அர்ஜுன் ரெட்டி படத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது, நிறைய இடங்களில் அந்த சாயல் தெரிகிறது, அப்படி தெரிந்தாலும் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

நடிப்பில் ஹரிஷ் கல்யாண் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார் என்று தான் கூறவேண்டும், காமெடியின் மாகாபா ஆனந்த் வயிறு குலுங்க சிக்கவைத்துள்ளார். குமாரு குமாரு என்று அவர் எல்லோரையும் அழைக்கும் காட்சிகள் சிரிப்பலை, அதே சமயம் பாலசரவணன் தனது பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.

ஹரிஷ் – ஷில்பா காதல் காட்சிகள் இந்த காலத்து இனைஞர்களுக்கு விருந்தாக இருக்கும். ஆனால் இரண்டாம் பாதி நிறைய இடங்களில் சலிப்பு தட்ட செய்கிறது. தேவை இல்லாத காட்சிகள் நிறைய இரண்டாம் பாதியில் இடம் பெறுவதால் சலிப்பு தட்டுகிறது.

மொத்தத்தில் முழுக்க முழுக்க காதலை பற்றி பேசும் படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இனைஞர்களை மட்டும் கவரும்

ரெடிங்: 3.0/5

Loading...