நடுரோட்டில் காரை தள்ளி கொண்டு சென்ற அஜித் – வெளியான சுவாரசிய நிகழ்வு!

அஜித்தை பற்றி பல சுவாரசிய தகவல்கள் அடிக்கடி வெளியே வரும். தனது எளிமை அனைவர்க்கும் சரி சமமாக மரியாதையை கொடுப்பது என்று அஜித்தை பற்றி அவரை தெரிந்தவர்கள் புகழாத ஆளே கிடையாது.

அப்படிதான் தற்போது மேலும் ஒரு சுவாரசியம் சம்பவம் வெளியாகியுள்ளது, அஜித்தின் நண்பர் பிரதாப் ஒரு சுவாரசிய நிகழ்வை தன்னிடம் கூறியதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதில், அஜித் நினைத்தால் உலகில் மிக உயர்ந்த கார்கள் வாங்க முடியும் ஆனால் அவருக்கு டாடா இண்டிகோ கார் தான் பிடிக்குமாம்.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அஜித்தும் பிரதாப்பும் இண்டிகோ காரை எடுத்துக்கொண்டு சென்னையை சுற்றி வளம் வருவார்களாம். அந்த மாதிரி செல்லும்போது ஒரு நாள் ஒரு இடத்தில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோனது.

அப்போது அஜித் அவரது நண்பரை காரில் உட்காரவைத்து காரை பெட்ரோல் நிலையம் வரை தள்ளிக்கொண்டே போனாராம்.

Suggestions For You

Loading...