இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டது!

Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.

ஷங்கருக்கு கமல் ஹாசனின் வயதான தோற்றத்தில் திருப்தி அளிக்காததால் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக செய்திகள் வந்தது.

இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது.

திட்டமிட்டதை விட அதிக பட்ஜெட் சென்றதால் படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் விளங்குவதாகவும், இந்தியன் 2 படம் கைவிடப்படுவதாகவும் தகவ்கள் வந்தன.

இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது,

“இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Suggestions For You

Loading...