பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய அதிரடி தாக்குதல் – பயந்து ஓடிய பாகிஸ்தான் விமானங்கள்!

இம்மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.

பதிலடி:

இதனால் கடும் கோபத்தில் இருந்த இந்திய தனது விமானப்படையைச் சேர்ந்த போர்விமானங்களுடன், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 ‘மிராஜ் 2000’ ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முகாம்கள் அழிப்பு:

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பயந்து ஓட்டம்:

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் போர் விமானங்கள் அங்கு வந்துள்ளன. ஆனால், இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்ததும் எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தானின் F-16 போர் விமானங்கள் திரும்பி ஓடியுள்ளன.

Source: ANI

Suggestions For You

Loading...