தளபதி 63 படத்தை தொடர்ந்து பூவையாருக்கு கிடைத்த மிக பெரிய வாய்ப்பு!

சிறுவர்கள் தங்களது திறமையை வெளிக்காட்ட தொலைக்காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கிறது. நிறைய தொலைக்காட்சிகள் பாடகர்கள் போட்டி , நடன கலைஞர்கள் போட்டி போன்றுவற்றை நடத்திவருகிறது.

இதில் சிறுவயது பாடகர்கள் தங்கள் திறமைகளை தொலைக்காட்சி மூலம் வெளிக்காட்டி நிறைய பாராட்டுகளையும் வாய்ப்புகளையும் பெற்றுவருகிறார்கள்.

அந்த வகையில் சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்து கானா பாடல்கள் பாடி அசத்துபவர் பூவையார். தற்போது சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் வரை வந்துள்ளார்.

அண்மையில் இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நட்பே துணை படைத்தளி நடித்த ஹிப்ஹாப் ஆதி பங்குபெற்றார். நிகழ்ச்சியில் பூவையாருடன் இணைந்துபாடியவுடன் என்னுடைய இசையில் வரும் அடுத்த பாடலில் இவரை பாட வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இவர் தளபதி 63 படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...