7 தலப்பாகட்டி கடைகளுக்கு தடை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

thalappakatti biriyani

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் தலப்பாக்கட்டி பிரியாணியின் தனித்துவமான ருசி தான் இதற்கு காரணம்.

ஆனால் இந்தப் பெயரில் பல இடங்களில் உணவகங்கள் இருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில், தலப்பாகட்டி உணவகத்தின் பங்குதாரர் நாகசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ”மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தங்களது உணவகமான தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விதித்து இருந்தார்.

அவர் கூறியுள்ள ஏழு கடைகள்… தலப்பாகட்டி பிரியாணி கோடம்பாக்கம், தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி, ஸ்டார் தலப்பாகட்டி ரெஸ்டாரன்ட் கீழ்பாக்கம், தலப்பாக்கட்டு பிரியாணி பூந்தமல்லி, தலப்பாகட்டி பிரியாணி ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஹலால் தலப்பாக்கட்டு பிரியாணி குரோம்பேட்டை, முகமது அஷ்ரப் தலப்பாகட்டி பிரியாணி கூடுவாஞ்சேரி ஆகியவை.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி கடை உள்பட ஏழு உணவகங்கள் தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இத்துடன், மனுவுக்கு ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உணவகங்களுக்கு உத்தரவிட்டார்.

Loading...