அஜித்தின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன் – பிரபல இயக்குனரே கூறிவிட்டார்!

ajith-60

தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து யார் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் எனபது பெரிய கேள்வியாக இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் கூடவே ஒரு வதந்தியும் வெளியானது.

அதாவது வினோத்திற்கு அஜித்திற்கு மனஸ்தாபம் ஏற்பட்டதால் அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்கமாட்டார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் அது பொய்யான செய்தி என்று நம்மதகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது.

இந்நிலையில் வினோத் அடுத்து, ரஜினி, விஜய்யுடன் பணியாற்றுகின்றார் என ஒரு சில பத்திரிகையாளர்கள் கூறினார்கள்.

ஆனால், பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் வினோத்தையே நேராக தொடர்புக்கொண்டு பேசியுள்ளார்.

அதற்கு வினோத் ‘சார் ரஜினி, விஜய் அவர்களிடம் நான் பணியாற்றவில்லை, இன்னும் ஒரு படம் அஜித் சாருடன் உள்ளது, அதுவும் எப்போது என்று தெரியவில்லை’ என வினோத் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்

Suggestions For You

Loading...