முதலில் பிடிக்கவில்லை – அஜித்திடம் ஓகே வாங்க வினோத் பட்ட கஷ்டம்!

போனிக் கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிக்கும், பிங்க் பட தழுவலான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில், நடிகர் அஜித்துடன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில், நடிகர் அஜித்துக்காக வழக்கறிஞர் கேரக்டர் உருவாக்கப்பட்டு, அதை பிரமாதமாக படமாக்கி இருப்பதாக படம் குறித்து வினோத் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்த படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு 60வது படமாகும்.

இதற்கு இடையில் பல விஷயங்கள் நடந்துள்ளது, அதாவது அஜித்திற்கு வினோத் முன்பு சொன்ன கதையில் திருப்தி இல்லையாம்.

ஆனால், போனிகபூர் கேட்டதால், வினோத் மீண்டும் வேறு கதையை ரெடி செய்து கொடுக்க, அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம், உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

Suggestions For You

Loading...