சூர்யா படத்தின் இணைந்த ஆஸ்கார் விருது வாங்கிய பிரபலம்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்.ஜி.கே’ படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்துசூர்யா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

தற்போது இப்படத்தில் குனீத் மோங்கா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சமீபத்தில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...