96 கௌரிக்கு அடித்த அதிஷ்டம் – யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் 96. காலம் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு காதல் படமாக இது அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.

பிரேம் குமார் இயக்கத்தில் வந்த இப்படம் தற்போதுநிறைய மொழிகளில் ரீமேக்செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது.

மலையாளத்தில் அனுக்கிரகீதன் ஆண்டனி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதிலும் பிரபல காமெடி நடிகர் சுராக் வெஞ்சாரமூடுவுடன் சேர்ந்து காமெடி காட்சிகளிலும் கலக்கியுள்ளாராம்.

Loading...