தளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா? உண்மை என்ன?

thalapathy-63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆகவுள்ளது.

பேய் படங்கள், சாமி படங்கள், அதிரடி சண்டைப் படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் போன்றவை பெரும்பாலும் பின்னி மில்லில் அரங்குகள் அமைத்து எடுக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தளபதி 63 அரங்குடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் செலவில், வீடுகள், வங்கி, தேவாலயம் உள்ளிட்டவற்றுடன் சுமார் 63 அரங்குகள் இன்று பிற்பகலில் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக பிரபல செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

புகைப்படத்துடன் ஒளிபரப்பான அந்த செய்தியை கண்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் தளபதி 63 படப்பிடிப்பு அங்கு நடக்கவில்லை. தீ விபத்து நடந்தது உண்மை தான் ஆனால் விஜய் படத்தில் தீ விபத்து நடந்தது என்று வந்த செய்தி தான் பொய்.

Suggestions For You

Loading...