ஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த என்னை நோக்கி பாயும் தோட்டா – இதுவா?

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

2016 ஆம் ஆண்டு இப்படத்திற்கு பூஜா போடப்பட்டு தொடங்கியது, அதே வருடம் டிசம்பர் மாதம் இதன் டீசர் வெளியானது. ஆனால் சென்ற வருடம் தான் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வந்திருந்தது.

ஆனால் ரிலீஸ் தேதியினை அறிவிக்காமலேயே இருந்தனர். எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சந்தோஷமான தகவல் வந்துள்ளது.

அதவாது, என்னை நோக்கி பாயும் தோட்டா மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.

Suggestions For You

Loading...