எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி – இந்த முறையாவது தோட்டா பாயமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “எனை நோக்கி பாயும் தோட்டா”. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க முக்கிய வேடத்தில் சசி குமார் நடித்துள்ளார்.

படம் தொடங்கி 4 வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் தான் மொத படப்பிடிப்பும் முடிந்தது. பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனது.

தற்போது, படத்தின் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் “ENPT ட்ரெய்லர் ரெடியாகி விட்டது. மேலும், படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

நமக்கு கிடைத்த தகவல்படி ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்களாம். பொறுத்திருந்து பாப்போம் இந்த முறையாவது சொன்ன மாதிரி வருவார்களா என்று.!

Suggestions For You

Loading...