எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வந்த சோதனை – இதற்கு முடிவே இல்லையா?

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்த நிலையில் தற்போது அதை தூசி தட்டப்படுகிறது.

2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் முழு படப்பிடிப்பும் முடிந்தது.

சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்கிடைத்தது. இதனால் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வந்துளளது.

மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Suggestions For You

Loading...