விஸ்வாசம் படத்தை தொடந்து முன்னணி ஹீரோவுடன் கைகோர்த்த சிவா!

ajith with director siva

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள என் ஜி கே படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதை தொடர்ந்து கே வி ஆனந்த் இயக்கியுள்ள சூர்யாவின் காப்பான் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலிஸ் செய்யவுள்ளார், மேலும், இறுதிச்சுற்று இயக்குனர் இயக்கத்திலும் நடித்து வருகின்றார்.

Suriya
Suriya

இந்நிலையில் சூர்யா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை பற்றிய அறிவிப்பு இன்று மாலை வருகிறது, நமக்கு கிடைத்த தகவல்படி இயக்குனர் சிவா தான் இப்படத்தை இயக்குவார் என்று தெரியவந்துள்ளது. விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது தற்போது ஹாட்டான செய்தி!

Loading...