துருவ் விக்ரமின் அடுத்த பட இயக்குனர் இவரா? இது தேவையா?

விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனதே பெரும் சர்ச்சைகள் ஆகிவிட்டது. அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் நடித்த இவர் பாலா இயக்கத்தில் முழுப்படத்தில் நடித்தும் அது ரிலிஸாகவில்லை.

அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, மீண்டும் அர்ஜுன் ரெட்டியை தற்போது ரீமேக் செய்து வருகின்றனர், இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் துருவ் அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கப்போவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த எந்த ஒரு படமும் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக் தான் ஆகியுள்ளனர், ஏன் விக்ரம் இந்த இப்படி ஒரு முடிவை எடுத்தார் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Suggestions For You

Loading...