தனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல்!

தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் இருக்கிறது. தற்போது இப்படத்தை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அதேப்போல விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள படம் சிந்துபாத், இதனை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார்.

இந்த இரு படங்களையும் ஒரே நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படங்களை வாங்கிய நிறுவனம் தான் பாகுபலி 2ம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டது. அந்த வகையில் பாகுபலி தயாரிப்பாளருக்கும், இந்த நிறுவனத்திற்கும் இடையில் பணப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக பாகுபலி தயாரிப்பாளர், ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங்

தங்களுக்கு தரவேண்டிய ரூ.17 கோடியை செட்டில் செய்த பிறகே சிந்துபாத், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை வெளியிட வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் இந்த இரு படங்களையும் வெளியிட ஐதரபாத் ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இரு படங்களும் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன

Loading...