கைவிடப்பட்ட செல்வராகவன் – தனுஷ் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிறது!

இயக்குனர் செல்வராகவன் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக உருவானவர். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதே படத்தில் தனது தம்பி தனுஷை ஹீரோவாக நடிக்கவைத்தார்.

அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான அணைத்து படங்களும் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. காதால் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் இருந்தனர்.

பிறகு சில காரணங்களால் இப்படம் நின்றுபோனது. தற்போது அந்த போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Suggestions For You

Loading...