நின்றுப்போன கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் படம் மீண்டும் தொடக்கம்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை இயக்குவதற்கு முன்பே தனுஷுடன் ஒரு படத்தை தொடங்கினார் கார்த்தி சுப்பாராஜ். ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளி போனது.

தற்போது மீண்டும் கார்த்தி சுப்பாராஜ் தொடங்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி செய்துவருகிறார்களாம்.

அசுரன் படத்தில் நடித்துவரும் தனுஷ் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க தொடங்குவார் என்று தெரிகிறது.

Suggestions For You

Loading...