தனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படத்திற்கு கிடைத்த விருது – செம தகவல்!

the extraordinary journey of the fakir

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனுஷின் நேரடியாக நடித்த ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது (The Audience Award For Best Comedy) கிடைத்துள்ளது.

அஜித்தை கிண்டல் செய்யும் வசனத்தை தவிர்த்த விஜய் – என்ன வசனம் தெரியுமா?

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா சாண்ட்-ஜோர்டி சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில், தனுஷ் நடிப்பில் உருவான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் என்ற ஹாலிவுட் படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கான பார்வையாளர்கள் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்தாண்டு, கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்த இப்படம், சமீபத்திய நார்வே திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டது. அதில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் படத்துக்கு ‘தி ரே ஆஃப் ஷன்ஷைன் என்ற முக்கிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...