திருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில் தெரியுமா?

கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கொடி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தந்தை, மகன் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவரின் தந்தை கதாபத்திரத்திற்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்.

மகன் தனுஷ் இதில் திருடனாக நடிக்கிறாராம். இளம் கதாபாத்திரத்தில் தோன்றும் தனுஷுக்கு ஜோடி தேர்வு தடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ், ராச்சசன் இயக்குனர் ராம்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பாராஜ் உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

Suggestions For You

Loading...