அசுரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல வெற்றி பட இயக்குனர்?

வட சென்னை வெற்றிக்கு பிறகு அசுரன் என்ற படத்திற்க்கு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். கடந்த மாதம் முதல் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல், வழக்கு எண். 18/9 உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தின் மூலமாக அவர் நடிகராக களமிறங்கவுள்ளார்.

Loading...