“புதுப்பேட்டை 2” பற்றி முதல் முறையாக பேசிய தனுஷ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தனுஷ் தற்போது அசுரன் படத்தின் மும்மரமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை.

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் அடுத்த நொடி நினைவுக்கு வருவது புதுப்பேட்டை தான்.

கொக்கி குமார் என்னும் தனுஷின் கதாபாத்திரம் இப்போதுவரைக்கும் மிகவும் பிரபலம். ஒரு சாதாரண ஆள் எப்படி
கேங்ஸ்டர் ஆகிறார் எனபதை துல்லியமான திரைக்கதை மூலம் காட்டியிருப்பார் செல்வராகவன்.

புதுப்பேட்டை படம் வெளியாகி 13 ஆண்டு கடந்துள்ள நிலையில் நாளை சென்னையில் சில இடங்களில் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது .

இதற்கிடையே தனுஷ் ஒரு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார். இன்று நடந்த Techofes 2019 விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வட சென்னை படத்திற்குகாக தனுஷுக்கு வழங்கப்பட்டது.

அப்போது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு ” நிச்சயம் புதுப்பேட்டை 2 படம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது, அதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதனால் புதுப்பேட்டை 2 படம் உருவாகும் என தனுஷ் கூறிய தகவல் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Suggestions For You

Loading...