இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி நடிகர் -அதிகாரபூர்வ தகவல்!

Indian 2

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார்.

மீண்டும் இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர், கமல் ஹாசன் இணைத்துள்ளார்கள். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 18ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

Indian 2 Poster

இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நெடுமுடி வேணு, சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அக்ஷய் குமார் அல்லது அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை தனது முகநூலில்
டெல்லி கணேஷ் அவர்களே கூறியுள்ளார்.

கமல் நடித்த நாயகன், அவ்வை சண்முகி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் படத்தில் டெல்லி கணேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...