தர்பார் போஸ்டர் காப்பியா? – டிசைனர் விளக்கம்!

darbar

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு தர்பார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் படமாகவுள்ளது.

தர்பார் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது, இதை ஹாலிவுட் பட போஸ்டர் காப்பி என்று பலர் கிண்டல் செய்தனர்.

தர்பார் பட போஸ்டரை வின்சி ராஜ் டிசைன் செய்தார். அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, காலா, கபாலி ஆகிய படங்களை அடுத்து ரஜினிகாந்த் சார் படத்தில் 3வது முறையாக பணியாற்றுவதற்கு கொடுத்து வைத்துள்ளேன் என்றார்.

நான் நேர்மையாக உருவாக்கிய போஸ்டரை வேறு ஒரு போஸ்டரில் இருந்து காப்பியடித்தேன் என்று கூறுவது கவலை அளிக்கிறது. அந்த ஹாலிவுட் பட போஸ்டரை நான் தற்போது தான் முதல் முறையாக பார்த்தேன். என் போஸ்டரை கலாய்ப்பவர்கள் ஹாலிவுட் போஸ்டருடன் ஒத்துப் போகும் வகையில் அதன் நிறத்தை மாற்றியுள்ளனர் என்கிறார் ராஜ்.

Suggestions For You

Loading...