தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் – இதையெல்லாம் கவனித்தீர்களா?

darbar

ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கான போட்டோ ஷுட் சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு பெயர் தர்பார் என்று அறிவித்துள்ளனர். அதோடு அறிவித்தபடி படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்க்கும் போது ரஜினி போலீஸாக நடிப்பது உறுதியாகிறது.

போஸ்டரில் ரஜினிக்கு பின் இரண்டு துப்பாக்கிகளும், ஒரு கைவிலங்கு திறந்த நிலையிலும் உள்ளது. போலீஸ் நாய், போலீஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் பேட்ஜ் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், பின்னணியில் ஒரு மேப்பும், கட்டிடமும் இடம் பெறுகிறது. குற்றம் நடைபெறும் இடங்களில் ஒட்டப்படும் மஞ்சள் டேப், அதோடு மும்பை என்ற வார்த்தையும் தலைகீழாக எழுதியுள்ளனர்.

நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா, நீங்களே முடிவு பண்ணுங்க என்ற பஞ்ச் வசனம் உள்ளது.

Loading...