சிம்புவிற்கு கண்டிப்பாக நான் பால் ஊத்துவேன் – காத்திருக்கும் பிரபலம்!

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் ட்ரைலர், புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த அமையத்தில் சிம்பு அதிரடி வீடியோ ஒன்று வெளியிட்டார்.

இதில் என் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுங்கள் என்று அவர் கூறியது இப்போது பல பிரச்சனைகளை உண்டாக்கியுள்ளது.

இந்த நேரத்தில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ள ராபர்ட் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இந்த படத்தில் ரொம்ப நாள் கழித்து சிம்பு நல்ல ஆடியிருக்கார்.

ரசிகர்கள் பால் ஊற்ற சொல்லி கேட்டார், அந்த ரசிகர்களில் நானும் ஒருவன், கண்டிப்பாக பால் ஊற்றுவேன் என்றார்.

Suggestions For You

Loading...