மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு போடுவோம் – வாயை விட்டு வம்பில் சிக்கிய சிம்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளவ வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் திரைக்கு வருகின்றது.

இப்படத்திற்கு யாரும் பேனர், போஸ்டர், பால் அபிஷேகம் என எதுவும் செய்யக்கூடாது, உங்கள் அம்மா, அப்பாவிற்கு ஏதாவது செய்யுங்கள் என்றார். உடனே சிம்புவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.

சிம்பு எனக்கு பெரிய பேனர் வையுங்கள், குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று பேசியுள்ளார், இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த சிம்புவின் பேச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, தனது கட்அவுட்டுக்கு அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறிய நடிகர் சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனால் தேவை இல்லாமல் வாயை விட்டு வம்பில் மாட்டுக்கொண்டார் சிம்பு என பேசப்பட்டு வருகிறது.

Suggestions For You

Loading...