ஆசிரியரிடம் கூறிவிடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நண்பன்! சின்மயி போட்டுடைத்த அடுத்த உண்மை

chinmayi

மீ டூ இயக்கம் மூலம், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் அளித்தார் பின்னணி பாடகி சின்மயி. அக்டோபர் மாதம் முழுவதும் இந்த புயல் தான் தமிழகத்தில் வீசியது. வைரமுத்து இவரது புகாருக்கு மறுப்பு தெரிவித்ததுடன், ‘என் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள், நான் நீதிமன்றத்தில் உங்களை பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

‘விரைவில், வைரமுத்து மீது நிச்சயம் வழக்கு தொடருவேன்’ என்று கூறியிருந்த சின்மயி, பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

அதோடு மட்டும் நிறுத்திவிடாமல் சின்மயி வெளியில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் வெளிச்சத்திற்கு காட்டி வருகிறார்.

அந்த வகையில், வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.

அந்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில், விளையாட்டாக ஆசிரியரை கிண்டல் செய்தவரை மிரட்டி தனக்காக பயன்படுத்தியுள்ளார் அவரது நண்பர். மற்ற விஷயத்திற்காக தொடங்கி கடைசியில் பாலியல் ரீதியில் வந்து முடிந்துள்ளது அந்த மிரட்டல். ஒருநாள் அந்த வாலிபரை அவரது நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளார்.

இதனை அந்த நபர் தனது தந்தையிடம் கூற அவர் அந்த நண்பனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்.

Suggestions For You

Loading...