நேற்று வரை சென்னை வசூலில் யார் முதலிடம்? பேட்டயா? விஸ்வாசமா?

இந்த வருடம் தொடக்கத்திலே சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. ரஜினிகாந்தின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் கடந்த 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இருதரப்பு ரசிகர்களுக்கு மத்தியிலும் செம வரவேற்பை பெற்று தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாக ஓடிவருகிறது. வசூலிலும் இரண்டும் படங்களும் பல சாதனைகளை புரிந்துவருகிறது.

எங்கு எடுத்தாலும் இரண்டு படங்களுக்கு நல்ல வரவேற்பு தான். இந்த படங்கள் 18 நாள் முடிவில் சென்னையில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.

பேட்ட- ரூ. 14.06 கோடி, விஸ்வாசம்- ரூ. 11.41 கோடி.

Suggestions For You

Loading...