மெர்சல், சர்கார் சாதனையை முறியடித்த பிகில், இன்னும் ஒரு சாதனை மட்டும் தான் மிச்சம்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியானது. வழக்கம் போல் இந்த பர்ஸ்ட் லுக்கையும் விஜய் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் விஜய்யின் மெர்சல், சர்கார் பர்ஸ்ட் லுக் பெற்ற லைக்ஸை ஒரே நாளில் பிகில் பர்ஸ்ட் லுக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தற்போது வரை பிகில் பர்ஸ்ட் லுக் லைக்ஸுகள் 1.6 லட்சத்தை தாண்டியுள்ளது, சர்கார் செகண்ட் லுக் 1.3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மெர்சல் பர்ஸ்ட் லுக் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான RT ஆகியுள்ளது, பிகில் பர்ஸ்ட் லுக் 70 ஆயிரம் RT ஆக, மெர்சல் சாதனையை முறியடிக்குமா? பார்ப்போம்.

Suggestions For You

Loading...