பிக் பாஸ் 4, 5 சீசன்களை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? வெளியான தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

விஜய்யின் 64வது படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?

இந்த நிலையில், 3ஆவது சீசனுக்கான படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொண்டுள்ளார் என்று அண்மையில் தகவல் வெளியானது. பிக் பாஸ் 3க்கு மட்டும் கமல் ஹாசன் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு தகவல் வந்துள்ளது.

அதாவது பிக் பாஸ் 4 மற்றும் 5 சீசன்களையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளாராம்.

Loading...