ரசிகர்களை அப்செட் ஆக்கும் பிக்பாஸ் புகழ் லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸாகிவிட்டார் லொஸ்லியா. தற்போது வாக்கெடுப்பு வைத்தால் இவர் தான் பிக்பாஸ் வின்னர் என்றே சொல்லிவிடலாம்.

அந்த அளவிற்கு இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். ஆனால், நேற்று ரசிகர்கள் அனைவருமே இவரை கொஞ்சம் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஏனெனில், அந்த வீட்டில் எதுவுமே செய்யாதது போல், வருகிறார், டான்ஸ் ஆடுகின்றார், பாட்டு பாடுகின்றார், இதை தவிர வேறு எதையும் செய்வது போல் தெரியவில்லை.

ஒரு சிலர் அபிராமி, மீரா, வனிதாவை மட்டுமே தான் காட்டுகின்றனர், லொஸியாவை காட்டுவதே இல்லை, அதனால், தான் அப்படி தெரிகின்றது என கூறி ஆதரவாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியே இருந்தாலும் எதாவது செய்தால் தானே லொஸ்லியாவை காட்டுவார்கள் என எதிர்தரப்பு வாதம் வைக்கின்றது, எது எப்படியோ வரும் நாட்களில் இவரின் செயல்பாடு எதுவாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

Suggestions For You

Loading...