விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் ரசிகையாகிவிட்டேன் – பிரபல நடிகை!

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் பட்டி தொட்டியெல்லாம் கொண்டாடப்பட்டது. தமிகத்தில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கிராமத்து வாசனையில் தந்தை மகள் பாசத்தை பேசும் இப்படம் குடும்பங்களுக்கு பிடித்து போனது. அஜித் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செமையாக நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை நந்தியா இப்படத்தை பற்றி பேசியுள்ளார், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துவந்தார். இதனையடுத்து, உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நந்திதா அளித்த பதில், ‘‘தல நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு பின்னர் அஜித்தின் ரசிகையாக மாறி விட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

நந்திதா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் “ஐபிசி 376” என்று படத்தில் நடித்து வருகிறார்.

Suggestions For You

Loading...